http://www.sstaweb.com/search/label/FOR%20CONTACT%20SSTA%20LEADERS!!!! SEND YOUR MAILS TO "sstaemail@gmail.com"

FOR CONTACT SSTA LEADERS Click here

Saturday, 4 July 2015

நீதித் துறை ஊதியக் குழுவின் பரிந்துரை: தமிழக அரசுக்கு மீண்டும் மூன்று மாதம் அவகாசம்! இல்லையெனில் நிதித்துறை தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் !

முதலாவது தேசிய நீதித் துறை ஊதியக் குழுவின் பரிந்துரையை முழுவதுமாக மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதாக தமிழக நிதித் துறைச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை உறுதி அளித்தார்.

மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க தனி இணையதளம்

மருந்துகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கு புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என மத்திய மருந்துகள் துறைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார்.
 இந்த அறிவிப்பு இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் மருந்துக் கடைகளிலும்

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: இதுவரை 9,170 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூன்றாம் நாள் முடிவில் 9,170 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
 அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பி.இ.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 51 ஆயிரம் இடங்கள் காலி

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 51 ஆயிரத்து 685 இடங்கள் காலியாக உள்ளன.
 இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர்

கல்லூரி குறித்த அனைத்துத் தகவல்களையும் அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி

மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி குறித்த அனைத்துத் தகவல்களையும் அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
 இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத்

சர்க்கரை நோய் இருப்பதை அறியாத 44 லட்சம் இளைஞர்கள்

மருத்துவத் துறையில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வந்தாலும் அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் அதிகமாக உள்ளன. நாடு முழுவதும் மக்களின் உணவு முறை மாறி வருகிறது. பெரும்பாலானோர் காரமான உணவுப் பொருள்களை விரும்பிச்

இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் படிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 9 கடைசி நாள்

இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு, இரண்டாம் ஆண்டு மருந்தியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் தேர்வு பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-IIல் (Group-II) நேர்காணல் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட 2266 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை தேர்வாணைய

25% ஏழை மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் இணையத்தில் வெளியீடு !

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய உரிமைச்சட்டம் 2009ன்படி, 25சதவிகிதம்ஏழைமாணவர்கள் சேர்கை விவகாரத்தில், தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் விவரம். tnmatricschools.comஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று இலவச

பணியிடை பயிற்சி இந்த ஆண்டு 10 நாட்கள் !

திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது

790 பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கி அரசாணை

2012,2013&2014. ல் நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி சான்றிதழின் உண்மைத்தன்மையை இனி முமுதன்மை கல்விஅலுவலகத்தில் தான் பெற வேண்டும் !

Friday, 3 July 2015

யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யு.பி.எஸ்., தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. நேர்முகத் தேர்வு முடிந்த நான்கு நாட்களில் தேர்வு முடிவுகள்

அதிகரிக்கும் RTI தபால்கள் ! அலசிப்படுத்தும் அதிகாரிகள் !

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு (ஆர்.டி.ஐ.,) நாடு முழுவதிலும் பொது மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் இதனை அரசு நிர்வாக துறைகள் பெரிதாக

அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டிய தெளிவுரைகள்


11.07.2015 தொடக்க /நடுநிலை ஆசிரியரகளுக்கு குறுவள மைய பயிற்சி அட்டவணை !மருத்துவப் படிப்புக்கு இடம் தேர்வு செய்த, 69 பேர், சேர்க்கை கடிதம் பெறாமல் புறக்கணித்து உள்ளனர். தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 2,939 பேர், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், பழைய மாணவர் சேர்க்கை விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்ததால், உடனடியாக சேர்க்கை கடிதம் தரப்படவில்லை. சிக்கல் தீர்ந்தபின் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது; கல்லுாரியில் சேர நேற்று கடைசி நாள். எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லுாரிகளில், 12 பேர்; சுயநிதி கல்லுாரிகளில், 46 பேர்; அரசு கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்பில், 11 பேர் என, 69 பேர், இடம் தேர்வு செய்தும், சேர்க்கை கடிதம் பெறவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறுகையில், காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. இடம் தேர்வு செய்த, 69 பேர் சேர்க்கை கடிதம் பெறவில்லை; இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 69 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும், என்றார்.

மருத்துவப் படிப்புக்கு இடம் தேர்வு செய்த, 69 பேர், சேர்க்கை கடிதம் பெறாமல் புறக்கணித்து உள்ளனர்.

தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 2,939 பேர்,

கண்களை பரிசோதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் பார்வை குறைபாட்டை கண்டறிவது குறித்து, பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்லடம் வட்டார வளமையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பீகாரில் 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா

 பீகாரில், போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, 1,400 ஆசிரியர்கள், மாநில அரசின் சட்ட நடவடிக்கைக்கு பயந்து, ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல ஆசிரியர்கள் ராஜினாமா செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி கணக்கிட்டு வழங்கப்படபோகிறது ஊதியம் 7 வது ஊதியகுழுவில் !

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும்

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு தலைக்கவசம்; வியாபாரிகளுக்கு அரசு எச்சரிக்கை: புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு

தலைக்கவசத்தின் விலையை சட்ட விதிகளுக்குப் புறம்பாக அதிக விலைக்கு விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தொழிலாளர் துறை எச்சரித்தது.
 அதிக விலைக்கு தலைக்கவசத்தை

பழைய பேப்பர் சேகரிக்கும் பள்ளி செல்லா குழந்தைகள்: செயல்படாத "சைல்டு லைன்' அமைப்பு

பழைய பேப்பர் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பள்ளி செல்லாக் குழந்தைகளை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள "சைல்டு லைன்' அமைப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Thursday, 2 July 2015

தமிழகத்தில் CPS திட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டியவை !!! தமிழகத்தில் முதல் வெளியீடு !உங்கள் பணம் எந்த கணக்கில் வைக்கப்பட போகிறது ???

8462 _ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நீட்டிப்பு அரசாணை வெளியீடு !

ஹெல்மெட் : பெண்கள்,பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு விலக்கு

தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசாணைப்படி ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

பட்டியல் இனத்தில் குறிப்பிட்ட உள்பிரிவிலேயே ஜாதி சான்றிதழ் வழங்கி வருவதால், அரசாணைப்படி சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சென்னை உயர்

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

சிறுபான்மை மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
 இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை

அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி?

அரசு பொறியியல் கல்லுாரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதுமையான கிரெடிட் மதிப்பீடு முறையினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கையேந்திய குழந்தைகள் கல்விப்பாதைக்கு மாற்றம்!

மதுரையில் கடந்தாண்டில் போக்குவரத்து சிக்னல், பஸ் ஸ்டாண்ட்களில் பிச்சை எடுத்த 48 குழந்தைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடமும், கல்விநிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஹெல்மெட் வழக்குப் பதிவதில் போலீஸ் ஜரூர்! லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் பறிமுதல்

ஐகோர்ட் உத்தரவுபடி கடலூர் மாவட்டத்தில் நேற்று கட்டாய ஹெல்மெட் அமலுக்கு வந்தது. கடலூரில் நேற்று ஹெல்மெட் போடாமல் சென்ற 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு திட்டம்

நாடெங்கிலும் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நாடா தெரிவித்துள்ளார்.

எம்.பி.,க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த பரிந்துரை( இடைநிலை ஆசிரியர்களுக்கு !!! )

எம்.பி.,க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த பார்லி., குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் பார்லி., உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என

TET( ஆசிரியர் தகுதி தேர்வில் என்னதான் நடக்கிறது ???

லாவன்யா மற்றும் சசிகலா மற்றும் பலர் ;தேர்வுக்கு பிந்தைய முன்தேதியிட்டு வழங்கிய மதிப்பெண் தளர்வினாலும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை என்னும் தவறான ஆசிரியர் தேர்வு முறை இருப்பதாக தொடர்ந்த உச்சநீதிமன்ற வழக்கு ஆசிரியர்கள்

இன்ஜினியரிங் மாணவர்கள் சேர்க்கை காலி இடங்களை அறிந்து கொள்ள !

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர இன்று கடைசி நாள்

தமிழகத்தில், ஜூன் 19ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ஒரு வாரத்திற்கு மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது.

D.T.Ed. ஆசிரியர் டிப்ளமோ: முதல் நாளில் 173 பேர் சேர்ந்தனர்..

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்குரிய டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.முதல் நாளில், டிப்ளமோ படிப்பில் 173 மாணவ, மாணவியர் சேர்ந்தனர்.தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் இணைய வழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை..

விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர்நலத் துறை சார்பில், அரசின் 28 விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில தேர்வு நாளை (ஜூலை 3) காலை 8 மணிக்கு நடத்தப்படுகிறது. தேர்வு நடைபெறும் இடங்கள்:ரேஸ்கோர்ஸ், மதுரை: ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான தடகளம், ேஹண்ட்பால், டெனிகாய்ட், இறகுபந்து மற்றும் நீச்சல் விளையாட்டு, பிளஸ் 1 மாணவர்களுக்கான கூடைபந்து விளையாட்டு. ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவி களுக்கான தடகளம், இறகுபந்து, ஹண்ட்பால்,வாலிபால், டெனிகாய்ட், கபடி தேர்வு.

அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் சிறுபான்மை உதவி தொகை பெற தேதி அறிவிப்பு..!

அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வரும், கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறுபான்மை மாணவர்களிடமிருந்து ஜூலை இறுதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்கள்

பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் ரூபாய் 750 -சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் !

ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெரும் போது தனி ஊதியம் PP : 750 வழங்க மறுப்பதாக அறியப்படுகிறது . அவர்களுக்காக பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

தமிழகம் முழிவதும் மூன்றாண்டுகளில் 400 ஆசிரியர்பயிற்சி நிறுவனம் மூடல்..!

தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆரம்பப்பள்ளிகளில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவகளை நியமனம் செய்தது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்தநியமிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகம் நியமிக்கப்பட்டதால் பெண்கள் அதிகளவில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படித்தனர்.

அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு....!

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், சேலம் மண்டல அளவிலான அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள பத்மவாணி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பி.எட். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், அதற்கான தகுதிகள்,

பிளஸ் 2: முதலிடம் பிடித்த 21 பேருக்கு முதல்வர் வாழ்த்து-

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவர்களை திங்கள்கிழமை வாழ்த்தினார். இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவர்களுக்கான மேற்படிப்புச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது.

'ஆவரேஜ்' மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் 'கல்தா'-

புதிய கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், அதிக தேர்ச்சி காட்ட, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பல பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில், சுமாராக படித்த மாணவர்கள், கட்டாயமாக தேர்ச்சி இழப்பு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், தேர்ச்சி இழப்பு செய்ய முடியாத சராசரி மாணவர்களை, கட்டாயமாக டி.சி., எனப்படும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, பல தனியார் பள்ளிகள் வெளியேற்றுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர், மாவட்ட

வரியை அறிய இணைய தளத்தில் வசதி: வருமான வரித் துறை அறிமுகம்.

வருமான வரி செலுத்துவோர் தங்களது வரித் தொகையை கணக்கிட்டு அறியும் வசதியை வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. www.incometaxindia.gov.in என்ற இணைய தளத்தில் இதற்கான தனியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லியில் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். தனிநபர்கள், நிறுவனங்கள், வர்த்தகர்கள் என அனைத்து பிரிவினரும், தங்கள் வருமானம்மற்றும் முதலீடுகள் குறித்த விவரங்களை இதில் பதிவு செய்து வரி எவ்வளவு என்பதை அறியலாம் என அவர்கள் கூறினர்.எனினும், விரைவாக தங்களது உத்தேச வரித் தொகையை அறிய உதவும் இந்த வசதி, முற்றிலும் துல்லியமாக இருக்கும் எனக் கூற இயலாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

6% அகவிலைப்படி உயர வாய்ப்பு: 01.07.2015 முதல் அகவிலைப்படி 113% லிருந்து 119% ஆக உயரும் என எதிர்பார்ப்பு!!!


CCRT, New Delhi propose Tribal Teachers Programmees on " ENHANCING UNDERSTANDING OF INDIGENOUS TRADITIONS" @ Mumbai on 1st Aug 2015


மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு பாடுபடுவோருக்கு தேசிய விருதுகள்: விண்ணப்பிக்க 10-ம் தேதி கடைசிநாள்

மத்திய அரசின், சமூக நீதி மற்றம் அதிகாரம் வழங்கும் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசிய விருதுகள் 3.12.2015 அன்று புதுடெல்லியில் கீழ்குறிப்பிட்ட பிரிவுகளில் வழங்கப்படவுள்ளன.

ஆசிரியர்களின் வருகை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு...!

ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 1,422 பள்ளிக்கூடங்கள் திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,422 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில், 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 200 நடுநிலைப்பள்ளிகளும் அடங்கும். இதைத்தவிர 253 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும், 23 நகராட்சி பள்ளிகளும், புதிதாக தொடங்கப்பட்ட 5 அரசு தொடக்கப்பள்ளிகளும், 50 கள்ளர் பள்ளிகளும், 16 ஆதிதிராவிடர் பள்ளிகளும், 14 சுய நிதி பள்ளிகளும்


மேலும் முந்தைய பதிவுகளைப்பார்க்க Older posts யினை கிளிக் செய்யவும்.